Monday , 10 December 2018
சற்று முன்
Home » வேளாண்மை செய்திகள் » தேயிலை விற்பனை சரிவு
தேயிலை விற்பனை சரிவு

தேயிலை விற்பனை சரிவு



கோவை தேயிலை ஏல மையத்தில் இந்த ஆண்டின் 12வது ஏலம் நேற்று நடந்தது. இதில் உள்ளூர் ரகம்(டஸ்ட்) 2.89 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. இதில் 1.58 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விற்பனை விலை கிலோ ரூ87.06. விற்பனை மதிப்பு ரூ1.38 கோடி. ஏற்றுமதி ரகம்(லீப்) 1.55 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. இதில் 98 ஆயிரம் கிலோ விற்பனையானது. சராசரி விற்பனை விலை கிலோ ரூ77.82. விற்பனை மதிப்பு ரூ76 லட்சம். கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் உள்ளூர் ரகம் வரத்து 44 ஆயிரம் கிலோவும், விற்பனை 40 ஆயிரம் கிலோவாக இருந்தது. விற்பனை விலை ரூ2.97 குறைந்துள்ளது. ஏற்றுமதி ரகம் வரத்து 33 ஆயிரம் கிலோவும், விற்பனை 23 ஆயிரம் கிலோவும் இருந்தது. விற்பனை விலை 91 பைசா குறைந்துள்ளது. மொத்தத்தில் உள்ளூர் மற்றும் ஏற்றுமதி ரக தேயிலைத்தூள் இந்த வாரம் ரூ2.14 கோடிக்கு விற்றுள்ளது. இது கடந்த வாரத்தைவிட ரூ60 லட்சம் குறைவு.

 

நன்றி தினகரன்



உங்கள் கருத்துகளை பதிவு செய்க.

உங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *

*