Monday , 17 June 2019
சற்று முன்
Home » மூலிகைகள் » துளசி » துளசியின் மருத்துவ குணங்கள்
துளசியின் மருத்துவ குணங்கள்

துளசியின் மருத்துவ குணங்கள்



துளசியின் மருத்துவ குணங்கள் சில 

  • தினமும் காலையில் 10 துளசி இலையை மென்று தின்பதால் இரத்தம் சுத்தியடையும்.  மார்பு வலி, தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய கோளாறுகள் நீங்கும்.
  • கண் பார்வைக் குறை உடையவர்கள் கண்களில் நேரடியாக இரண்டு சொட்டு துளசிச் சாற்றை விட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • துளசியைத் தினமும் உட்கொண்டு வந்தால் காது வலி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.
  • துளசி கஷாயம் வாய் துர்நாற்றத்தையும் பால் விளை நோய்களையும் நீக்கும்.
  • துளசிச் செடி அதிக அளவில் வளரும் இடங்களில் காற்றில் இருக்கும் புகை கிருமிகள் போன்ற மாசுகள் அழிந்து காற்று மண்டலம் தூய்மை அடையும்.
  • வீடுகளில் துளசிச் செடிகளை வளர்ப்பதால் தூய்மையான காற்றைப் பெறலாம்.
  • துளசிச் செடியின் வாடையின் காரணமாக கொசுக்கள் வருவதில்லை. இதனால் மலேரியா நோய் பரவுவது தடுக்கப்படுகிறது. மலேரியா நோய் கண்டவர்கள் துளசி இலையைத் தினமும் மென்று உட்கொண்டு வந்தால் மலேரியா நோய் நீங்கும்.
  • தொழு நோயை குணமாக்கும் மருந்துகளில் அதிக அளவில் துளசி சேர்க்கப்படுகிறது.
  •  உடலின் வெப்பத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கு துளசி உதவுகிறது. துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும்.
  •  துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
  • இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது.


உங்கள் கருத்துகளை பதிவு செய்க.

உங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *

*