Wednesday , 24 July 2019
சற்று முன்
Home » வேளாண்மை செய்திகள் » ஜனவரி மாதத்தில் தேயிலை உற்பத்தி 6 சதவீதம் சரிவு
ஜனவரி மாதத்தில் தேயிலை உற்பத்தி 6 சதவீதம் சரிவு

ஜனவரி மாதத்தில் தேயிலை உற்பத்தி 6 சதவீதம் சரிவு



தேயிலை உற்பத்தி ஜனவரி மாதத்தில் 6 சதவீதம் சரிந்து 2.06 கோடி கிலோவாக குறைந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 2.19 கோடி கிலோவாக இருந்தது. தென்மாநிலங்களில் உற்பத்தி குறைந்ததே இதற்கு காரணம் என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தேயிலை உற்பத்தியில் அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அசாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்தி ஜனவரி மாதத்தில் 8 லட்சம் கிலோ உயர்ந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் தேயிலை உற்பத்தி 19.50 லட்சம் கிலோவிலிருந்து 28.50 லட்சம் கிலோவாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களின் மொத்த தேயிலை உற்பத்தி சென்ற ஆண்டை காட்டிலும் குறைந்துள்ளது. இந்தியாவின் மொத்த தேயிலை உற்பத்தியில் அசாம், மேற்கு வங்காளம் மற்றும் தென்மாநிலங்களின் பங்களிப்பு 90 சதவீதமாக உள்ளது.

சென்ற 2012-13-ஆம் நிதி ஆண்டில் தேயிலை உற்பத்தி முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3.62 சதவீதம் அதிகரித்து 113.50 கோடி கிலோவாக இருந்தது. சர்வதேச அளவில் தேயிலை உற்பத்தி மற்றும் நுகர்வில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

நன்றி தினத்தந்தி



உங்கள் கருத்துகளை பதிவு செய்க.

உங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *

*