பெங்களுர், ஒசூர், ராயக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து காலிபிளவர் சேலம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகிறது. மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்கள் காலிபிளவர் சீசனாகும். சேலம் மார்க்கெட்டிற்கு தினமும் 5 ஆயிரம் பூக்களுக்கு மேல் விற்பனைக்கு வந்தது. இதனால் ஒரு பூ ரூ10 வரை விற்கப்பட்டது. இந்நிலையில், சீசன் முடிந்ததால் மார்க்கெட்டிற்கு காலிபிளவர் வரத்து குறைந்து தினமும் ஆயிரம் பூக்கள் மட்டுமே வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் காலிபிளவர் விலை ரூ10 வரை அதிகரித்துள்ளது. தற்போது காலிபிளவர் அளவை பொறுத்து ரூ20 முதல் ரூ30 வரை விற்கப்படுகிறது. ‘சீசன் முடிந்துள்ளதால் காலிபிளவர் விலை அதிகரிக்கும்’ என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
நன்றி தினகரன்