பொட்டாஷ் உர மானியத்தை டன்னுக்கு ரூ.9,400 ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. இதற்கான ஒப்புதலை உர அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை அளித்துள்ளது. பொட்டாஷ் உர தேவைக்கு இந்தியா பெருமளவு இறக்குமதியை சார்ந்தே உள்ளது. உர இறக்குமதியில் கடந்த 5 ஆண்டுகளாக 10வது இடத்தில் இந்தியா உள்ளது. இருப்பினும், யூரியாவுக்கான மானியத்தை குறைக்கவில்லை. தற்போது அறிவித்துள்ள மானிய குறைப்பு ஏப்ரலுக்கு பிறகு நடைமுறைக்கு வருகிறது.
நன்றி தினகரன்