Monday , 10 December 2018
சற்று முன்
Home » இயற்கை விவசாயம் » இயற்கை முறை விவசாயத்தில் நெற்பயிர்
இயற்கை முறை விவசாயத்தில் நெற்பயிர்

இயற்கை முறை விவசாயத்தில் நெற்பயிர்



கடந்த காலங்களில் செயற்கையான உரங்கள் வருகைக்கு முன்பு விவசாயம் என்றாலே இயற்கை உரங்கள் மூலம் விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்

காலப்போக்கில் செயற்கையான உரங்கள் ஏராளமாக வரத் துவங்கியதால் இயற்கை உரங்களை மறந்தனர்.தமிழகத்தில் பெரும்பாலான விவசாயிகள் செயற்கை உரங்களை பயன்படுத்தி நெற்பயிர் செய்து வரும் நிலையில்,விவசாயி ஒருவர் ஐந்து ஆண்டுகளாக இயற்கை உரங்களை பயன்படுத்தி நெற்பயிர் செய்து வருகிறார்.மேலும் அவர் இயற்கை முறை விவசாயத்தில் 10 ஆண்டுகளாக கரும்பு, வாழை போன்றவற்றை பயிர் செய்து வருகிறார்.

  • ஐந்து ஆண்டுகளாக, இயற்கை முறை விவசாயத்தை செய்து வருகிறேன். தற்போது ஐந்து ஏக்கரில் ஒற்றை நாற்று நடவு முறையில் வெள்ளை பொன்னி நெல் பயிர் செய்துள்ளேன்.
    இயற்கை முறையில் அமுத கரைசல் தயாரித்து, அதனை அடியுரத்திற்கு பயன்படுத்துகிறேன்.
  • மாட்டு சாணம் ஒரு கிலோ, கோமியம் 10 லி., வெல்லம் 2 கிலோ ஆகியவற்றை சேர்த்து மூன்று நாட்கள் வரை நொதிக்க வைத்து அமுத கரைசலை தயாரித்து, அதனை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, பாசன தண்ணீரில் கலந்து விடலாம் அல்லது ஸ்பிரேயர் மூலமும் தெளிக்கலாம்.
  • பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, வேப்பங்கொட்டைகளை இடித்து மூன்று நாட்கள் வரை தண்ணீரில் ஊறவைத்து, பூச்சி விரட்டி தயாரித்து, அதனை ஏக்கருக்கு 3 லிட்டர் தெளிக்கலாம்.
  • பூண்டு, வேப்ப இலைகளை சேர்த்து இடித்து, அதனை கோமியத்துடன் மூன்று நாட்கள் ஊறவைத்து தெளிக்கலாம்.
  • ஏக்கருக்கு 75 கிலோ கொண்ட 40 மூட்டை வரை அறுவடை செய்துள்ளேன்.
  • செயற்கை உரங்களிட ஏக்கருக்கு 4,000 ரூபாய் வரை செலவாகும்.
  • இயற்கை முறை விவசாயத்தில் வெல்லம் மட்டுமே விலைக்கு வாங்குகிறேன்.
  • மற்றபடி ஆள் கூலி, அறுவடை செலவு எல்லாமே ஒன்றுதான்.
  • இயற்கை முறை விவசாயம் மூலம் நிலத்தின் தன்மை பாதுகாக்கப்படுகிறது.
  • இதன் மூலம் உணவை உணவாக வழங்குகிறேன். விஷமாக கொடுக்கவில்லை.


உங்கள் கருத்துகளை பதிவு செய்க.

உங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *

*